மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்களில் பெண் உதவியாளர் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்களில் அதிகளவு சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்ள் கிடைக்கப்பெற்றதை யடுத்து, இன்று முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்களை கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்களில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் பெண் உதவியாளர் ஒருவரும் பயணிக்க வேண்டும் எனவும், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரித்துள்ளனர்.
0 comments :
Post a Comment