சில இணையதளங்களின் செயற்பாடுகள் புகழ்பெற்ற முற்போக்கு ஊடகவியலா ளர்களின் தொழிலுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும், பொறுப்பின்றி குறுகிய நோக்கங் களுக்காக செயற்படும் நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு எதிராக, செயற்படுவது, அரசாங்கத்தின் பொறுப்பாகுமென, அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊடக நிறுவனங்கள், மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இருக்க வேண்டிய ஒழுக்க நெறிக்கோவைக்கு முரணாக சில இணையதளங்கள் செயற்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிழையானதும், இழிவுபடுத்தக்கூடியதுமான தகவல்களை வெளியிடுவதை, தடுப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் ஊடக ஒழுக்க நெறிகளை கவனத்தில் கொண்டு வாசகர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் ஊடகங்கள் செயற்பட வேண்டுமெனவும், பிழையான தகவல்களை வெளியிடுவதன் மூலம், மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல ஊடக நிறுவனங்கள், ஊடக ஒழுக்க நெறிகள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்துகின்றன. எனினும், இலாபத்தையும், குறுகிய நோக்கங்களையும் நிறைவேற்றுவதற்காக ஒரு சில இணையதளங்கள் திட்டமிட்ட வகையில் செயற்பட்டு வருகின்றன. இதனால் வாசகர்களை அபகீர்த்திக்கு உட்படுத்துவதையும், அவர்களை இழிவுபடுத்துவதையும் தடுக்கும் வகையில் முறையான வேலைத்திட்டங்கள் இருக்க வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, கடந்த காலங்களில் இடம்பெற்ற இணையதள செயற்பாடுகள் மூலம் தெரியவந்துள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில இணையதளங்களில் வெளியாகும் கட்டுரைகளை செய்தியாக கொள்ள முடியாது. அவற்றை வெளியிடுவோரை, ஊடகவியலாளர்கள் என அழைக்க முடியாதுள்ளதாகவும், தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
சிறுவர்கள் உட்பட இளைஞர்களும், இணையதளங்களை கூடுதலாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் உள்ளங்களை சீர்குலைக்கும் வகையில் பிழையான முன்னுதாரணங்களை வழங்குவதை, வன்மையாகக் கண்டிக்க வேண்டுமெனவும், குறுகிய நோக்கங்களுக்காக செயற்படும் ஊடக நிறுவனங்கள் உட்பட ஊடகவியலாளர்களுக்கு எதிராக செயற்பட வேண்டுமென, பொது மக்கள் விடுக்கும் வேண்டுகோள்களை நிராகரிப்பதற்கு, பொறுப்பு வாய்ந்த அரசாங்கமொன்றினால் முடியாது என, அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment