Wednesday, July 11, 2012

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கருணாவின் சகோதரி ! கருணா பிள்ளையானிடையே போட்டி!

எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுகின்றது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கம். அவ்வியக்கத்தின் பிரதான வேட்பாளராக கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படுகின்ற சந்திரகாந்தன் போட்டியிடுகின்றார். அவர்தான் முதலமைச்சர் வேட்பாளரும்கூட என அக்கட்சி தெரிவிக்கின்றது.

இதேநேரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கருணா எனப்படுகின்ற முரளிதரன் தேர்தல் வேட்புமனுத்தாக்கல் மற்றும் வேட்பாளர் தெரிவு விடயங்கள் தனது தலைமையிலேயே இடம்பெற்று வருதாக கூறுவதுடன் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகள் பெறுகின்றவருக்கே முதலமைச்சர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் கருணா தனது சதோதரி ஒருவரை இத்தேர்தலில் களமிறக்கவுள்ளார் என இலங்கைநெற் அறிகின்றது. இவ்வாறு அவர் தேர்தலில் குதித்தால் விருப்பு வாக்குகளுக்காக கருணா பிள்ளையானிடையே பெரும் போட்டி நிலவும் என்பது வெளிப்படை. ஆனால் இப்போட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழிவிடக்கூடாது என்பதே பலரின் விருப்பாகவும் உள்ளது.

கருணாவின் சகோதரி தேர்லில் இறங்கினால் விருப்புவாக்குகளால் அங்கு எழக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைக்கு பிள்ளையான் தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டு வேட்பாளர் பட்டியலில் அவருக்கு இடம் கொடுக்கக்கூடாது என அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகவும் அறியக்கிடைக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com