ஒபாமாவின் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அமெரிக்க பொலிஸ் அதிகாரி.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செலுக்கு போலீஸ்காரர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் போது, மோட்டார் பைக்கில் பாதுகாப்புக்கு செல்லும் பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரி ஒருவர், ஒபாமாவின் மனைவியை சுட்டுக் கொல்ல போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன், தனது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த துப்பாக்கியை காட்டியுள்ளார். அந்த துப்பாக்கியால்தான் சுட்டுக் கொல்ல போவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை முதன் முதலில் செய்தி வெளியிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் வென்டோலின் கிரம்ப் கூறுகையில், புகார் கூறப்பட்ட போலீஸ் அதிகாரி நிர்வாக பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். கொலை மிரட்டல் குறித்து நாங்கள் கவனமாக விசாரித்து வருகிறோம் என்றார். இந்த கொலை மிரட்டல் குறித்து அதிபர் குடும்பத்தினர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
0 comments :
Post a Comment