இணையதளங்களை பதிவு செய்வதற்கான சட்டத்தில் திருத்தம்
இலங்கையில் செயற்படும் செய்தி இணையதளங்களை பதிவு செய்தல், மற்றும் வருடாந்தம் புதுப்பித்தல், போன்ற சரத்துகளை உள்ளடக்கி 1973ம் ஆண்டின் 5ம் இலக்க இலங்கை பத்திரிகை பேரவையின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு, அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பிரகாரம், ஒவ்வொரு இணையதளங்களிடமிருந்து பதிவுக்கட்டணமாக ஒரு லட்சம் ரூபாவும், புதுபித்தல் கட்டணமாக வருடாந்தம் 50 ஆயிரம் ரூபாவும் அறவிடுவதற்கான சரத்துகள், புதிய சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment