தந்தை மகளை வல்லுறவுக்குட்படுத்தினால், அதற்கு பொலிஸார் எப்படி பொறுப்பாளியாவார்கள்?
தந்தையொருவர் மகளை வல்லுறவுக் குட்படுத்தினால், மாற்றான் தந்தை மகளை வல்லுறவுக்குட்படுத்தினால், மக்கள் ஏன் பொலிசாரை குற்றம் சுமத்த வேண்டும்? வன்மம் காரணமாக மக்கள் கொல்லப்பட்டால், அதற்கு பொலிஸார் எப்படி பொறுப்பாளியாவார்கள்? பொலிஸார் மாத்திரம் தனித்து நின்று குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியாது. சமயத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊடகங்களும் இதற்கு உதவ வேண்டும் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஷபக்ஷ செயலாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த நாட்டில் குற்ற அலை வீசுவதாகக் கூறுவதை நான் மறுக்கின்றேன். அமைச்சர்களிடம் இருந்து பொலிஸார் கட்டளைகளைப் பெறுவதில்லை. சட்டத்தை நிலைநாட்டி, குற்றவாளிகளைக் கைது செய்யவும், நாட்டில் குற்றங்களைக் குறைவடையச் செய்யவும் அதிக அதிகாரங்கள் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
மறுபக்கத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்படாவிட்டால், அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் கிராமத்தில் தவறாக நடந்து கொண்டால், அவர்கள் சமூகத்திலிருந்து அகற்றப்படாவிட்டால், அதற்கு பொலிஸார் பொறுப்பாளியாவார்கள். எனவேதான் குற்றம் இழைப்பவர்கள் யாராயிருந்தலும் அவர்களை தண்டிப்பதற்கு நாங்கள் பொலிசாருக்கு அதிக அதிகாரங்கள் மற்றும் சுதந்திரத்தை கொடுத்திருக்கின்றோம் என்று பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.
0 comments :
Post a Comment