Monday, July 9, 2012

ஹெய்ட்டியில் இலங்கை படையினருக்கு ஐ.நா பதக்கங்கள்.

ஹெய்ட்டி குடியரசில் உள்ள ஐக்கிய நாட்டின் ஸ்திரப்படுத்தும் மிசனில் பணியாற்றும் இலங்கை அமைதிப்படை யினருக்கு, விருது வழங்கும் நிகழ்வு லியோகானில் உள்ள இலங்கைப் படையினரின் தலைமையகத்தில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி வென் கென்னடி, படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பெர்ணான்டோ ரொட்ரிக் கோலார்ட், மறுவாழ்வு பணிப்பாளர் நாயகமும் படை கேணலுமான மேஜர் ஜெனரல் ஆர். எ. சமரதுங்க மற்றும் பலுரம் இந்த வைபவத்தில் கலநது கொண்டனர்.

சிங்கத் தோரணங்கள் உட்பட பல்வேறு இலங்கையைப் பிரதிபலிக்கும் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. ஐ.நா மற்றும் இலங்கை தேசிய கொடிகளுடன் வருகை தந்த விருந்தினர்களை இராணுவ முறைப்படி இலங்கைப் படையினர் வரவேற்றனர். படைக் கொமாண்டர் கேணல் சிரிநாத் ஆரியசிங்க விருந்தினர்களை முறைப்படி வரவேற்ற பின்னர், இயற்கை அனர்த்தங்களால் மற்றும் வன்செயல்களால் பலியான ஹெய்ட்டியருக்கும், ஹெய்ட்டில் கடமையில் இருக்கும் போது உயிர்நீத்த ஐ.நா படையினருக்கும் ஒரு நிமிட மௌனாஞ்சலி செலுத்தப்பட்டது.

ஹெய்ட்டில் இலங்கைப் படையினரின் சேவையை, ஒழுக்கம் மற்றும் நடத்தை என்பனவற்றை படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பெர்ணான்டோ ரொட்ரிக் கோலார்ட் வெகுவாகப் பராட்டினார்.

அமைதி காக்கும் படையில் கட்டளைத் தளபதிகள் சுலோசன் மாரப்பெரும, ரொசான் குணவர்தன உட்ப 42 இலங்கை விமானப்படையினர் ஐக்கிய சாடுகள் சபையின் பதக்கங்கள் வழங்கி கௌவிக்கப்பட்டனர். விழா இறுதியில் இலஙகையின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பல்வேறு கலைநிகழச்சிகள் இடம் பெற்றன.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com