Thursday, July 19, 2012

வெளிநாட்டு நிதியில் பிழைக்கும் அரசியல் கட்சிகள். விபரம் வெளியிட்டார் தினேஸ் குணரட்ண

தேர்தல் ஆணையாளரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள 64 அரசியல் கட்சிகளில் கீழேயுள்ள கட்சிகள் வெளிநாட்டு நிதியைப் பெறுகின்றன என்று அமைச்சர் தினேஷ் குணவர்தனா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆண்டு தோறும் அவை பெறும் தொகை வருமாறு:

1. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி – ரூபா 3,600,000. 00
2. பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர முனணி – ரூபா 875,000. 00
3. ஈழவர் ஜனநாயக முன்னணி – ரூபா 800,000. 00
4. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – ரூபா 593,000. 00
5. ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி – ரூபா 500,000. 00
6. தமிழீழ விடுதலை முன்னணி – ரூபா 490,000. 00
7. தேசிய சுதந்திர முனணி – ரூபா 275,000. 00
8. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி – ரூபா 170,000. 00
9. ஐக்கிய தேசியக் கட்சி – ரூபா 49,000. 00

ஐக்கிய சுதந்திர முன்னணி உட்பட 43 கட்சிகள் வெளிநாட்டு நிதி பெறவில்லையாம். 4 கட்சிகள் தமது கணக்கு அறிக்கையைக் காட்டவில்லையாம். எல்ரிரிஈ ஆதரவாளர்களும் புலம்பெயர்ந்தோரும் அனுப்பிய பணம் இலங்கையின் இறைமைக்கும் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவித்ததா என்று ஆராய்ந்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com