உலகின் பிரபல செல்வந்தர்கள் சொத்துகளை மறைத்து வைத்திருக்கிறார்களாம்
உலகின் பிரபல செல்வந்தர்கள் மற்றும் அக்குடும்பங்களின் 32 ட்ரில்லியன் அமெரிக்க டொலரை தாண்டும் நிதிசார் சொத்துகள் தொடர்பான வெளிப்பாடுகள் வழங்கப்படாதிருப்பதாக, புதிய அறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், 29 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட வரி வருமானத்தை இழக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும், உலகெங்கும் சட்டவிரோதமாக பேணப்படும் வங்கிக்கணக்குகள் 10 மில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியுள்ளதாகவும், இக்கணக்குகளை பேணுவதற்காக, உலகின் பிரபல நிதி நிறுவனங்களின் உதவிகளும் பெறபப்ட்டுள்ளதாகவும், தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன.
1970 ஆம் ஆண்டு தொடக்கம் 139 நாடுகளின் செல்வந்தர்கள் 2010 ஆம் ஆண்டுக்குள் சேகரித்துள்ள நிதியின் அளவு, 7.3 ட்ரில்லியன் அமெரிக்க டொலருக்கும் 9.3 ட்ரில்லியன் அமெரிக்க டொலருக்கும் இடைப்பட்டது என, அறிககைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment