மகாவலி கங்கைக்குள் கார் விழுந்தததில் ஒருவரின் சடலம் மீட்பு. காரைத் தேடும் பணியில் பொலிஸார்!
கண்டி பொல்கொல்ல மகாவலி கங்கைக்குள் கார் ஒன்று விழுந்து விபத்திற்குள்ளானதில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதுடன், நீரில் விழுந்த காரைத் தேடும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டியில் இருந்து சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று "சீ் பிளேன்" நிறுத்தப்படுகின்ற இடத்திற்கு அருகே வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் ஆற்றில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த காரில் எத்தனை பேர் பயணித்தனர் என தெரியவல்லை என தெரிவித்த பொலிஸார் காரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment