இணைய அந்தரங்கத்தின் மீதான புதிய தாக்குதல்- களுக்கு அமெரிக்க அரசாங்கம் தயாராகிறது
(By Marcus Day) கடந்த சில மாதங்களாக, இணையம் மற்றும் மின்னணு தகவல் தொடர்புகளின் கண்காணிப்புக்கான ஒரு சட்ட அடிப்படையை உருவாக்குவதற்காக தனது முயற்சிகளை அமெரிக்க அரசாங்கம் அதிகப்படுத்தியிருக்கிறது. ஏப்ரல் 26 அன்று, காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு ”இணைய புலனாய்வுப் பகிர்வு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை “ (Cyber Intelligence Sharing and Protection Act (CISPA) நிறைவேற்றியது. இந்த மசோதா 1947ம் வருட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (National Security Act) திருத்தமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இதுவரையிலும் “இணைய அச்சுறுத்தல்களுக்கு” தொடர்புடைய ஏற்பாடுகள் இல்லாதிருந்தது.
தேசியப் புலனாய்வுக் குழுவின் உறுப்பினர்கள் ஸ்தாபனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் “இணைய அச்சுறுத்தல் தகவல்களை” பகிர்ந்து கொள்கின்ற மற்றும் இதை செய்கின்ற நிறுவனங்களை “ஊக்குவிக்கின்ற” ஒரு அமைப்பை உருவாக்குமாறு தேசியப் புலனாய்வு இயக்குனரிடம் CISPA கோரும். வேண்டுமென்றே விஸ்தரிக்கப்பட்ட இந்த மசோதாவின் உள்ளடக்கம் Comcast அல்லது AT&T போன்ற இணையதள சேவை அளிப்பவர்களுக்கு (ISPs) அவர்களுடைய பயனாளிகளின் தொடர்புகள் மற்றும் தகவல்களை கண்காணிப்பதை கூடுதலாக தூண்டுவதுடன், அரசாங்கம் மற்றும் கூட்டுத்தாபன தகவல்வழங்குவோரை (whistleblowers) தண்டிப்பதற்கான முயற்சிகளை நெறிப்படுத்தும்.
ஒரு கணிப்பொறி (a system) அல்லது வலையமைப்பின் (network) பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்கும் “அரசாங்க அல்லது தனியார் நிறுவனத்தின் ஒரு கணிப்பொறியை அல்லது ஒரு வலைத் தளத்தை இழிவுபடுத்துதல், சிதைத்தல் உள்ளிட்ட முயற்சிகளிலிருந்து தனியாரின் ஒரு கணிப்பொறி அல்லது வலையமைப்பிற்கான அச்சுறுத்தல்” போன்ற குறிப்பிட்ட வகையிலான தகவல்களால் இணைய அச்சுறுத்தல்கள் செய்யப்படுவதாக இச்சட்டம் முன்மொழிகிறது. அல்லது ”தனியார் அல்லது அரசாங்கத்தின் தகவல்கள், அறிவுடைமை சொத்துக்கள், தனிப்பட்டமுறையில் அடையாளம் காணத்தக்கதாயுள்ள தகவல்களை கையாடல் அல்லது திருட்டு” போன்றவை. வேறு வார்த்தைகளில், கிட்டத்தட்ட எந்த வகையான “தகவல்களும்” இணைய அச்சுறுத்தலாக வரையறுக்கப்பட முடியும், எனவே அவை அரசாங்கம் மற்றும் கூட்டுத்தாபனக் கண்காணிப்பின் சட்டரீதியான இலக்காக இருக்கும்.
இந்த சட்டம் மின்னணு தகவல் தொடர்பினைப் பயன்படுத்துகின்ற எந்த ஒரு நபரின் அந்தரங்க உரிமைகள் மீது தீவிர பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் என்று அமெரிக்க நூலகக் கழகம் (The American Library Association) குறிப்பிட்டது: ”இந்த மசோதா forty-eight state library record confidentiality laws மற்றும் federal Electronic Communications Privacy Act, the Wiretap Act, the Foreign Intelligence Surveillance Act, and the Privacy Act” உள்ளிட்ட நடைமுறையிலுள்ள எல்லா இரகசிய சட்டங்களையும் தாண்டிச்செல்லும்.
காங்கிரஸால் CISPA அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், அது செனற்சபைக்கு செல்கிறது. அங்கு அது இந்த கோடையில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் அங்கீகரிக்கப்படலாம். எவ்வாறாயினும், ஜனாதிபதி பாரக் ஒபாமா மசோதா அதனுடைய தற்போதைய வடிவத்தில் இருந்தால் தடுப்பாணையை பிரயோகிப்பதாக எச்சரித்துள்ளார். எதிர்பார்த்தபடி, அமெரிக்க குடிமக்களின் படுகொலைகள் மற்றும் காலவரையறையற்ற சிறையடைப்பை அமைப்புமுறைப்படுத்திய நிர்வாகத்தின் சார்பாக குடியுரிமை சுதந்திரத்திற்காக சில புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புகழ்ச்சியையே இந்த தடுப்பாணை அச்சுறுத்தல் குறிப்பிடுகிறது என்று ஒபாமா நிர்வாக ஆதரவாளர்கள் உரிமை கோரியிருக்கிறார்கள்.
உண்மையில், தகவல் தொடர்புகளைக் பொறுப்புடன் கண்காணிப்பதற்கு உள்நாட்டு பாதுகாப்புத் துறை பொறுப்பாக இருக்க வேண்டும் என்பது உண்மையில், ஒபாமா நிர்வாகத்தின் முக்கிய விமர்சனப் புள்ளியாக இருக்கிறது. ”வெள்ளை மாளிகையின் இணைய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர், ஹாவர்ட் ஸ்மித் உள்ளிட்ட ஒபாமா ஆலோசகர்கள், தகவல் பகிர்வு மட்டுமே உளவாளிகளுக்கும் தகவல்திருடர்களுக்கும் எதிராக போதுமான பாதுகாப்பை வழங்க முடியாது என்று கூறியிருப்பதாக” ப்ளூம்பேர்கின் ஒரு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. நாட்டின் முக்கிய அமைப்புமுறை மற்றும் வலையமைப்புக்களின் இணைய பாதுகாப்பினைக் கட்டுப்படுத்துவதில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை பொறுப்புள்ளதாக்கவேண்டும் என்ற கொனெக்டிகட் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் யோசப் லீபர்மேனிடமிருந்து வந்த ஒரு மசோதாவை வெள்ளை மாளிகை ஆதரிக்கிறது
லீபர்மேனின் மசோதாவான Cyber security Act, ”ஏதாவது நிறுவனத்தின் நடவடிக்கைகள் குழப்பப்பட்டால் பொருளாதாரத்திற்கு, தேசியப் பாதுகாப்பிற்கு, அல்லது தினசரி வாழ்க்கைக்கு பேரழிவை அல்லது “முக்கிய பாதிப்பை விளைவிக்கும்” என்ற நிலையிலுள்ள எந்த நிறுவனத்திற்கும் பொருந்தும். வேறு வார்த்தைகளில், இது எல்லாவற்றிற்கும் இல்லையென்றாலும், கூடுதலான பிரதான கணணி வலையமைப்புகளுக்கு பொருந்தும்.
அவருடைய பங்கிற்கு, லீபர்மேன் முன்னதாக தன்னுடைய குடிமக்களின் வலைத் தள தொடர்புகள் மீது கண்டிப்பான கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் சீனாவின் திறமையைக் கண்டு பொறாமைப்படும் விதமாக தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த வருடப் புரட்சியின் இடையில் எகிப்திய அரசாங்கத்தால் தகவல் தொடர்புகளை செயலிழக்கச் செய்ய பயன்படுத்தப்பட்ட அதே மாதிரியான முறையிலான உயர்மட்ட ஆற்றலுக்கு உட்படுகின்ற, ஓர் இணைய “நிறுத்த இயக்கியை” (“kill switch”) அவர் முன்மொழிந்திருக்கிறார்.
செயல்பாட்டில், லீபர்மேனின் மசோதா உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு பரந்த இணையம் மற்றும் தொலை தொடர்புகளுக்கான கண்காணிக்கும் கருவிகளை அளிக்கும். சுதந்திர சந்தையின் தீவிர பாதுகாப்பாளர் ஃபரீட் ஸகாரியா சமீபத்தில் சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டது போன்று, உள்நாட்டு தொடர்புகளின் தனிப்பட்ட செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக அமெரிக்க புலனாய்வுத் துறைகள் மொத்தத்தில் 30 ஆயிரம் பேரை (குறைந்தபட்சம்) பணியமர்த்தியது போல, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஏற்கெனவே 2 லட்சத்து 30 ஆயிரம் பேரை பணியில் அமர்த்துகிறது,
பொழுதுபோக்கு மற்றும் பதிப்பக தொழிற்துறையின் ஆலோசனையுடன் வரையப்பட்டு ஆதரவழிக்கப்பட்ட முன் கூறிய இரண்டு உரிமையற்ற வெளியீட்டுக்கு எதிரான மசோதாக்களான (anti-piracy bills) Stop Online Piracy Act மற்றும் PROTECT IP Act (SOPA/PIPA) ஆகியவற்றிற்கு வெகு விரைவிலேயே ”இணைய பாதுகாப்பு” மசோதாவை செயல்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகள், பரந்த அளவிலான எதிர்ப்புக்குள்ளானதுடன், தொழில்நுட்பத்துறையின் முக்கிய உறுப்பினர்களால் விமர்சனமும் செய்யப்பட்டன.
ஜனநாயக உரிமைகளை மீறுவதற்காக கூகுள், மைக்ரோசாஃப்ட், மற்றும் ஃபேஸ்புக் ஆகியவை முந்தைய மசோதாக்களை எதிர்க்கவில்லை, மாறாக வியாபாரம் செய்வதற்கு சற்று தடையாக இருக்கின்றன என்பதாலாகும். அது போல சட்டமியற்றுபவர்கள் தற்போதைய இணைய பாதுகாப்பு மசோதாக்களை தொழில்நுட்பத் துறைகளுக்கு மிகவும் ஏற்புடையதாய் மாற்றுவதற்கு வேலை செய்திருக்கிறார்கள். SOPA/PIPAஐ எதிர்த்தவர்களில் பல நிறுவனங்கள் வெளிப்படையாக CISPAஐ ஆதரித்துள்ளன அல்லது அமைதியாக இருந்திருக்கின்றன.
அமெரிக்க சட்ட மசோதாக்கள் பரிசீலனையின்கீழ் இருப்பதுடன் கூடுதலாக, தன்னுடைய சொந்த விருப்பிலான சட்டங்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதான இணையத்தள நிறுவனங்களுடன் FBI கலந்தாலோசித்துள்ளது, தொழில்நுட்ப வலைத்தளமான CNET-ன்படி, அதற்கு பல வகையான தொலைத்தொடர்பு மென்பொருள் மற்றும் சேவைகளில் “மறைவான” கண்காணிப்பு செயல்பாடு தேவைப்படும்.
FBI ஆளுனர் ஆலோசனை அலுவலகத்தால் இயற்றப்பட்டு முன்மொழியப்பட்ட ஒரு சட்டம் உதாரணமாக, ஃபேஸ் புக் போன்ற சமூக வலைத் தளங்களில் உடனடி செய்தியனுப்புவது; மற்றும் ஸ்கைப் அல்லது கூகுள் வாய்ஸ் போன்ற Voice over IP சேவைகள், இணையம் சார்ந்த ஜி-மெயில், அல்லது ஹாட் மெயில் போன்ற மின் –அஞ்சல்களின் சங்கேத மொழி “ஒட்டுக்கேட்க சாதகமானதாக” (“wiretap-friendly”) இருப்பதை உறுதி செய்வதற்காக அதிகரித்துவரும் பிரபல தொலைதொடர்பு தொழில்நுட்ப சேவையாளர்களை நிர்ப்பந்திக்கும். தற்போது தொலைத்தொடர்புகள் நிறுவனங்களை மட்டும் உள்ளடக்குகின்ற, முன்குறிப்பிட்ட இணையம் சார்ந்த சேவைகளை உள்ளடக்காத முன்மொழியப்பட்ட சட்டம் 1994 Communications Assistance for Law Enforcement Act ஐ திருத்தும்.
சமீபத்திய வருடங்களில் குறிப்பாக ”இணையம் சார்ந்த மின் –அஞ்சல், சமூக வலைத்தளங்கள் மற்றும் நேருக்கு–நேர் தகவல்தொடர்பு” போன்றவற்றைக் பிரித்தெடுப்பதில் புதிய தகவல் தொழில்நுட்பங்களின் அதிகரிப்பால் மக்களை கண்காணிக்கும் அதன் திறன் தடைக்குட்பட்டிருப்பதாக FBI அதிகமாக புகார் தெரிவித்துள்ளது. உண்மையில், பிரிட்டிஷ் செய்தித்தாளான Guardian இன் படி, FBI சமீபத்தில் ஓர் ஓர்வேலியன் வகையிலான சிற்றறிக்கையை வெளியிட்டது. அதில் ”முகவரியில்லாதவர்கள்” மற்றும் ”மறை குறியீட்டைப் பயன்படுத்துபவர்கள்” மாதிரியான, வலைத் தள இரகசியத்தைப் பராமரிப்பதற்கான பல பிரபலமான, தொடர்ந்து மாற்றப்படும் முறைகள் ஆகியவை “பயங்கரவாத செயல்பாடுகளின்” அறிகுறிகளாக இருக்கலாம்” என்று அது குற்றம்சாட்டியது.
இணைய தளம் மீதான ஒரு கண்காணிப்பு கருவிக்கு தொழில்நுட்ப நிறுவனங்களின் நிபந்தனையுடன்கூடிய எதிர்ப்பு தனியாக நிதியியல் காரணங்களை அடித்தளமாக கொண்டுள்ளது என்று CNET அறிக்கை மேலும் விளக்கியது: “உதாரணமாக, பகிரங்கமான நீதிமன்ற நடைமுறைகளின்போது எந்த வியாபார இரகசியங்களையோ அல்லது சட்டம் நிறைவேற்றலுடன் பகிர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ள, அதனால் வெளியிடப்படாதிருக்கின்ற பிற இரகசிய தகவல்களையோ கசிவதற்கு எதிரான சில பாதுகாப்புகள் சார்ந்த எந்த புதிய சட்டத்தையும் தொழிற்துறை காண விரும்புகிறது” என்று கூறிய ரோஸல் தொம்சன், Thomsen and Burke இல் ஒரு கூட்டாளியாகவும், தொழில்நுட்பம் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகியாகவும் FBI-ன் ஆராய்சிக் குழுவின் ஒரு உறுப்பினராகவும் இருக்கிறார். இவ்வாறான மொழி தொழிற்துறை மற்றும் காவல்துறைக்கு புதிய தொழில்நுட்பங்களை சமாளிப்பதை “கொஞ்சம் எளிதாக்கும்” என்று அவர் கருதுகிறார்.
இணையம் மீதான சிறந்த கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதற்கான அமெரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளுக்கான வேகம், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் இரண்டையும் கண்காணிப்பதற்கான ஆளும் வர்க்கத்தின் அவசியத்தின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு சுதந்திரமான மற்றும் வெளிப்படையாக இணைய தளத்தை பாதுகாப்பதற்காக அரசியல் கட்டமைப்பின் எந்தப் பிரிவினர் மீதோ அல்லது தொழிற்துறை பிரிவின் மீதோ நம்பிக்கை வைக்கக் கூடாது.
0 comments :
Post a Comment