Tuesday, July 3, 2012

பாகிஸ்தானில் மீண்டும் இராணுவ ஆட்சி வரும் -பர்வேஸ் முஷாரப்

பாகிஸ்தானில் மீண்டும் இராணுவ ஆட்சி வரலாம் என்று முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பெனாசிர் கொலை வழக்கில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு, அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதனால் அவர் எப்போது பாகிஸ்தானுக்கு வந்தாலும் அவரை கைது செய்வோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்திருப்பதுடன், முஷாரப்பை கைது செய்து ஒப்படைக்குமாறு சர்வதேச பொலீஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்நிலையில் நாட்டை விட்டு தப்பிச் சென்று லண்டனிலும், துபாயிலுமாக வசித்துவரும் முஷாரப், விரைவில் நாடு திரும்பப் போவதாக கூறி வருகிறார்.

இதேவேளை, பாகிஸ்தான் பெருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி வருவதாகவும், தமது நாட்டின் அரசியல் சட்டம் புனிதமானது எனவும், அதை காப்பாற்ற வேண்டுமெனவும், பாகிஸ்தானில் அரசியல் நிலைமை மிக மோசமடைந்துள்ளதால், மக்கள் நாட்டை காக்க மீண்டும் இராணுவத்தை எதிர்நோக்கியுள்ளனர். அதனால், எந்த நேரமும் இராணுவ ஆட்சி மீண்டும் ஏற்படலாம் என அமெரிக்காவில் வசிக்கும் தனது ஆதரவாளர்களிடம் முஷாரப் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment