Tuesday, July 24, 2012

மஞ்சள் கோட்டை அலட்சிப்படுத்தி, பாதையை கடப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

மஞ்சள் கோட்டை அலட்சிப்படுத்தி, பாதையை கடக்கும் பாதசாரிகளுக்கு எதிரான சட்டம் இன்று முதல் கடுமையாக அமுல்ப்படுத்தப்படவுள்ள தாகவும், போக்குவரத்து விதிகளை மீறும் இதுபோன்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட பல விபத்துகளுக்கு, பாதசாரிகள் மஞ்சள் கோட்டின் மூலம் பாதையை கடக்காமையே காரணமாகும் எனவும், இதனால் மஞ்சள் கோட்டை கடக்கும் சட்டத்தை கடுமையாக அமுல்ப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம், எமது நீதி கட்டமைப்பிற்குள் பல வருடங்களாக உள்ளடக்கப்பட்டுள்ளதாவும், பாதசாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் காரணமாக, அதனை கடுமையாக அமுல்ப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும், இன்று முதல் கொழும்பு நகரில் இச்சட்டம் கடுமையாக அமுல்ப்படுத்தப்படும் எனவும், அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வீதியை கடப்பதற்கான மாற்றுப்பாதைகளை, கட்டாயம் பாதசாரிகள் பின்பற்ற வேண்டுதெனவும், இதனை உதாசீனம் செய்வோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும், இதற்கு உடனடியாக அபராதம் அறவிடும் நடைமுறை இல்லையெனவும், இவர்கள் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com