வவுனியா சிறைச்சாலையில் கடமையி லிருந்த 3 சிறைக்காவலர்களை முன்னாள் புலி உறுப்பினர்கள் சிறைப் பிடித்து பின்னர் விசேட அதிரடிப் படையினர் புகுந்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமை அறிந்தது. இச்சம்பவத்தினை தொடர்ந்து வவுனியா சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலிகள் 303 பேரை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்தது நிர்வாகம்.
இவ்விடமாற்றத்திற்கு பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் முன்னாள் புலிகள் அங்கு பங்கர் ஒன்றை அமைந்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட பங்கரில் புலிகள் பல்வேறுபட்ட சட்டவிரோத பொருட்களை அங்கு சேமித்து வைத்திருந்துள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஆயிலும் மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
எது எவ்வாறாயினும் மேற்படி பொருட்கள் சிறைச்சாலையினுள் கொண்டு செல்லப்படுவதற்கும் குறிப்பிட்ட பங்கர் அமைக்கப்படுவதற்கும் சிறைச்சாலை காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் இடம்பெற்று இருக்க முடியாது என்பது வெளிப்படை உண்மை.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளப்படும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளே முதலில் சட்டத்தின் முன்நிறுத்தப்படவேண்டியவர்கள் ஆவர்.
No comments:
Post a Comment