அரிய வகை உயிரினங்களை கடத்த முயன்ற வெளிநாட்டு உல்லாச பயணிகள் இருவரை கைது
இலங்கைக்கே உரித்தான அரிய வகை உயிரினங்களை சூட்சுமமான முறையில் கடத்த முயன்ற வெளிநாட்டு உல்லாச பயணிகள் இருவரை கைது செய்து ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர். காலி பிரதேச உனவட்டுன ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த குறித்த, உல்லாச பயணிகள் இருவரும் தெற்கு அதிவேக பாதையின் ஊடாக கொழும்பு நோக்கி பயணம் செய்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் அவசர பிரிவிற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பினையடுத்து, உடனடியாக செயல்பட்ட பொலிஸார், இவ்வுல்லாச பயணிகளிடம் சோதனை நடத்திய போது சூட்சுமமான முறையில் எடுத்துச் செல்லப்பட்ட அரிய வகை உயிரினங்களை கண்டு பிடித்தனர்.
சந்தேக நபர்கள் எல்பிட்டிய மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்களுக்கு 10 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment