பந்மநாபா அணியிலிருந்து வெளியேறிய ரட்ணம் சுரேஸின் பிரதிநிதியாக TNA யில் போட்டி!
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி) யின் தலைவர் துரைரெட்ணம் கட்சியிலிருந்து வெளியேறி சுரேஸ் அணியுடன் இணைந்து கொண்டுள்ளதுடன் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 14 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் தமிழரசுக்கட்சி சுருட்டிக்கொண்டதுடன் 5 இடங்களை பங்கு கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. அவற்றில் ரெலோவிற்கு இரு உறுப்பினர்களும் புளொட்டிற்கு ஒரு உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் இற்கு ஒரு உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஒரு ஒருப்பினரும் பங்கிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment