ரணில் விக்கிரமசிங்க தலையிட்டதால் மயிரிழையில் தப்பினார் சஜித்
ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபைத் தேர்தல் பரப்புரை வேலைகள் நேற்று பிற்பகல் இரத்தினபுரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பால்டிய ஹோட்டலில் இடம் பெற்ற இந்த ஆரம்பவிழாவில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ஐ.தே.க யின் செயலவையின் தீர்மானத்தை விமர்சனம் செய்துள்ளதுடன், கட்சித் தலைவர் 06 ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படும் தீர்மானத்தை தான் ஆதரிக்கவில்லையென்றும் சஜித் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சஜித் தெரிவித்ததால் சப்ரகமுவை வேட்பாளர்கள் மற்றும் சஜித் பிரேமதாசவும் இடையே சூடான வாக்குவாதம் ஏற்பட்டதுடன், செயலவையில் கலந்துகொண்டிருந்தும் அங்கு கருத்து தெரிவிக்காமல் வெளியில் வந்து விமர்சிப்பது ஏன் என்று வேட்பாளர்கள் எழுப்பினர்.
அதற்கு தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு பிரச்சினையை தணித்ததாகவும், இதனால் சஜித் தப்பிவிட்டார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment