சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம்கோரிச் சென்றிருந்த முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சங்கர் எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். வீணையைத்தூக்கிச் சென்று தொடர்ந்தும் மக்களின் தலையில் மிளகு அரைக்க முடியாது எனக்கணிப்பிட்டுள்ள சங்கர் புலிகள் கட்டிவிட்டுச் சென்றிருக்கின்ற வீட்டுக்குள் நுழைந்தால் மக்களை ஏமாற்றலாம் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார்.
ஓட்டுக்குழுக்களின் அம்பாறை மாவட்ட தலைவன் என முன்னொரு காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் வர்ணிக்கப்பட்ட சங்கர் தற்போது கதிரைக்காக அதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காலடியில் சரணாகதியடைந்துள்ளதாக ஈபிடிபி ஆதரவாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் கொழும்பில் இரு ஆடம்பர வீடுகளை கொள்வனவு செய்துள்ளதாக குறிப்பிடும் ஈபிடிபி உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் வென்றால் கல்முனை அக்கரைப்பற்று மட்டுநகர் திருமலை என கிழக்கின் பிரதான நகர்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வீடு கட்டத்திட்டமிட்டிருப்பார் எனவும் கூறுகின்றனர்.
இவர்கள் எல்லாம் சோத்து பஞ்சத்துக்காக கொள்கை இல்லாமல் போராட வெளிக்கிட்டவர்கள என எண்ணதோன்றுகின்றது , கொள்கை இல்லாத கூட்டமைப்புடன் சேருவதை விட சுஜெசைசாக போட்டியிட்டிருக்கலாம்.
ReplyDelete