இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என சரத் கூறுவதன் பொருள் என்ன? லால் காந்த
சரத் பொன்சேக்கா நாட்டிற்கெதிராக செயற்படும் பிரிவினைவாதிகளின் முக்கிய துரும்பு என தெரிவித்த ஜே.வி.பி உறுப்பினரும், பாராளமன்ற உறுப்பினருமான கே.டி.லால் காந்த, இதுகுறித்து சரத் பொன்சேகா தனது நிலைப்பாட்டை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என மாத்தறையில் இடம்பெற்ற ஜே.வி.பி.யின் மக்கள் சந்திப்புக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் எந்தெந்த இடங்களில் இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் எனவும், ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்கிணங்க சரத் பொன்சேகா மற்றும் சம்பந்தன் ஆகியோர் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றக் கோருகின்றனர் எனவும், கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்திடம் உள்ள நன்மை தீமைகளை நாம் தீர்த்துக் கொள்ளலாம், அது மக்களின் வேலை. வடக்கிலும், கிழக்கிலும் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார் இதே போன்று சம்பந்தனும் இதனைத் தொடர்ந்து கூறி வருகிறார்.
சம்பந்தன் என்பவர் சர்வதேசத்துடன் இணைந்து ஈழத்தை நிறுவுவோம் எனக் கனவு காண்பவர். அவ்வாறெனின் இவர்கள் எதனைக் கூறுகின்றனர்? சரத் பொன்சேக்கா இதனைத் தெளிவுபடுத்த வேண்டும். இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என சரத் பொன்சேக்கா கூறுவதன் பொருள் என்ன? என கே.டி.லால் காந்த கேள்வியெழுப்பியுள்ளார்.
0 comments :
Post a Comment