உரியபதவி தந்தால் ஐக்கிய தேசியக கட்சியில் இணையத் தயார் என்கிறார் சரத் பொன்சேகா.
தான் வெளியிட்டுள்ள கொள்கைகளுக்கு அமைவாகச் செயல்படுவதற்கு உரிய அதிகாரம் மற்றும் பொறுப்பும் வழங்கப்படுமாயின் தான் ஐதேக வில் இணைவதற்குத் தயார் என்கிறார் முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகா. மேலும் கருத்து தெரிவித்த அவர், ஐதேக மற்றும் மவிமுவால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்ட தனக்கு ஐதேக மீது சிறிதும் வெறுப்பு இல்லை யென்றும் ஆனால் தொகுதி அமைப்பாளர் போன்ற சிறிய பதவியைப் பெற்றுக் கொண்டு வாளாவிருக்க முடியாது என்றும், ஐதேக உரிய அதிகாரம் கொண்ட பதவி கொடுத்தால், ரங்கே பண்டார கூறுவது போல சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரியாவை இணைத்துக் கொண்டு வட மத்திய மாகாணத்தில் மட்டுமல்ல முழு நாட்டிலுமே வெற்றி பெற்றுக் காட்டுவேன் என்றும் கூறினார்.
0 comments :
Post a Comment