Friday, July 13, 2012

என்னை எதிர்ப்போருக்கு நோ நோமிநேஷன் என்கிறார் மேர்வின் சில்வா

இனிமேல் தனக்கு எதிரான களனி பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படமாட்டாது என்று பொது மக்கள் தொடர்பு மற்றும் பொது மக்கள் அலுவல்கள் அமைச்சர் மேர்வி சில்வா கூறுகிறார். நானே இந்த தொகுதியின் அமைப்பாளர் எனத் தெரிவிக்கும் அவர் தொகுதி அமைப்பாளருக்கு எதிராக செயல்படுவோருக்கு நியமனம் கிடையாது என்றார்.

கூட்டமைப்பின் கதவு திறந்தே இருக்கின்றது எந்த நேரத்திலும் போகிறவர்கள் போகலாம் வருகிறவர்கள் என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார், அதுவே எனது கொள்ளையும். எனவே எந்த நேரத்திலும் கூட்டமைப்பை விட்டு விலக விரும்புபவர்கள் விலகிச் செல்லலாம் என்று அமைச்சர் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் களனித் தொகுதியில் தனக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் பெயரைக்குறிப்பிட்ட அவர் குறிப்பிட்ட நபர் தன்னிடம் வரும்போது பாட்டா செருப்புடன் வந்ததாகவும் தற்போது சப்பாத்து போட்டு ரை கட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்யுள்ளதுடன் அவர் வரும்போது அவர்மீது போதைவஸ்து வியாபாரம் செய்தாக பல வழக்குகள் சுமத்தப்பட்டிந்தாகவும் அவை யாவற்றிலிருந்தும் குறிப்பிட்ட நபரை தானே காப்பாற்றியதாகவேறு கூறினார்.

மேலும் 15 வது ஆசிய கனிட்ட மெய்வல்லுனர் போட்டியில் 400 ஒ 4 மீட்டர் பெண்கள் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற களனி குருகுல வித்தியாலயத்தின் டி. பவித்திரா ஹங்சவிக்கு கல்விக்கான சகல செலவுகளையும் தான் பொறுப்பேற்பதாக அமைச்சர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com