Friday, July 6, 2012

பதிப்புரிமை திருட்டுக்கு எதிரான உடன்படிக்கையை ஐரோப்பிய பாராளுமன்றம் நிராகரித்தது.

Anti-Counterfeiting Trade Agreement (ACTA) என்ற பதிப்புரிமைத் திருட்டுக்கு எதிரான, உலகளாவிய உடன்படிக்கையை ஐரோப்பிய பாராளுமன்றம் 487 : 39 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. இந்த உடன்படிக்கை இணையத்தில் படங்களைப் பரிமாறிக் கொள்வதையும், online இசையைக் கேட்பதையும், தடைசெயகின்றது என இவ்வுடன்படிக்கைக்கு எதிராகப் போராடும் பெரும்பாலான இளைஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதற்கெதிராக கடந்த பெப்ரவரி மாதம் பாரிய அளவிலாள ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை ஐரோப்பிய நாடுகளில் நடாத்தியவர்கள், இந்த ACTA உடன்படிக்கை தமது சுதந்திரத்தை மறுப்பதுடன், தங்களது online செயற்பாடுகளை துப்பறிவதற்கு இடம் கொடுக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் மார்டின் சுல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த புலமைச் சொத்துக்கள் உரிமைச் சட்டத்தக்கு எதிரானவர்கள் அல்லர் எனவும், ACTA துஷ்பிரயோகத்துக்கு அதிக இடம் கொடுப்பது நுகரும் பயனாளிகளின் சுதந்தித்துக்கும், குடிமக்களின் சுதந்திரத்துக்கும், புத்தாக்கத்துக்கும், தகவல்களின் சுதந்திரமான பரவலுக்கும், தடையாக இருக்கும் என்று கருதுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com