பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கம் தவறினால் நடவடிக்கை! வருகிறது புதிய சட்டம்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்க நெறிக் கோவை ஒன்று உருவாக்குதல் தொடர்பாக இந்த நாட்களில் கலந்துரையாடல் நடைபெறுன்றது என்று பாராளுமன்ற தடை, ஒழுக்கம், மரபு மற்றும் பாதுகாப்பு பற்றிய குழுவின் தலைவர் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாராளுமன்றத்திற்கு வெளியே உறுப்பினர்களின் ஒழுப்பம் சிதைந்து விடும் வகையில் நடந்து கொள்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் முறையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.. அதற்காக உரிய பரிந்துரைகளை முன்வைப்பதற்கு முன்னாள் சபாநாயகர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவை முன்னவர்களை சாட்சிக் குழு சந்தித்து அட்டவணைப் படுத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இப்புதிய ஒழுக்க நடைமுறைகள் அமுலுக்குவந்தால் இரவு விடுதிகளில் குடித்துவிட்டு ஆட்டம்போடும் அரசியல்வாதிகள் பலர் சிக்கலில் மாட்டுவர் என்பதும் அவர்களின் அடாவடிகளிலிருந்து மக்கள் விடுவிக்கப்படுவர் என்பதும் எதிர்பார்ப்பு.
0 comments :
Post a Comment