புத்தளம் -வென்னப்புவ பகுதியில் சுவிஸ் பிரஜையொருவர் பலி
புத்தளம் -வென்னப்புவ பகுதியில் சுவிஸ் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் தொடர்பாக குறித்த சுவிஸ் பிரஜையுடன் வசித்து வந்த இலங்கை பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சுவிஸ் பிரஜையின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment