முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அலகு வேண்டுமாம்.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தேர்தல் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்ட வேறான நிர்வாக அலகு ஏற்படுத்தும் யோசனையை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்படுத்துவதற்கு அரசிடம் முன்வைத்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தகைய புரிந்துணர்வு உடன்படிக்கை இன்றி எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஒத்துழைப்பு வழங்குவது கட்சிக்கு அரசியல் ரீதியல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிடுளார்.
இவ்வாறான இணக்கப்பாட்டுகள் தொடர்பாக தமது கட்சி முன்னாள் தலைவர்களான சந்திரிகா பண்டாரநாயக்கா மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசியிருந்தோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் என அவ்விணையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
1 comments :
மனுசனாய் பிறந்து விட்டு தலைவர்களுக்கு தானும் அழியுனும் அப்பாவி மக்களும் அழியணும் அதுக்கு தான் இந்த புது புரச்சி ?
Post a Comment