சமாதானத்தை நோக்கிப் பயணிக்கும் இலங்கை யுடன் இணைந்து செயற்படுவோம்- அமெ-தூதுவர
யுத்தத்தின் பின்னர் சமாதானத்தை நோக்கிப் பயணிக்கும் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கை க்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரீஷியா புடென்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக் காவின் சுதந்திர தினத்தை முன்னிடட்டு கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒனறிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதற்காக இந்த நாட்டின் ஊடகவியலாளர் பாரிய சேவைகளை ஆற்றியுள்ளதாக தெரிவித்த அமெரிக்கத் தூதுவர், யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கையின் சமாதானத்திற்கான பயணத்திற்கு அமெரிக்கா மிகவும் நெருக்கமாக செயற்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும் 20 வருடங்களுக்கும் அதிக காலம் யுத்தம் நிலவிய இந்த நாட்டில் தற்போது பாரிய சவால்கள் இல்லையென தாம் கருதுவதுடன், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை கவனத்திற்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment