Tuesday, July 31, 2012

ராஜீவ் கொலை குற்றவாளிகளின் மனுக்களை நிராகரிக்க வலியுறுத்துவோம்-இளங்கோவன்

ஈரோடு: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றாவாளிகளின் கருணை மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்த உள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான 3 பேரையும் தூக்கிலிட தடை விதிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மேலும் 3 பேரின் சார்பாக ஜனாதிபதியிடம் கருணை மனு அளிக்கப்பட்டது. இந்த கருணை மனுவை ஏற்று கொள்ள வேண்டும் என்று ஒரு குழுவினரும், அந்த கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஒரு குழுவினரும் தமிழகத்தில் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்த போவதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் வலியுறுத்த உள்ளோம். அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 15ம் தேதி திருப்பூரை அடுத்த குன்னத்தூரில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலையை மத்திய அமைச்சர் வாசன் திறந்து வைக்க உள்ளார் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com