யுத்தத்தின் மீது கவனம் செலுத்திய ஊடகங்கள் தற்போது கற்பழிப்புக்கள் மீது கவனம் செலுத்துதாம்
இந்த நாட்டில் நாளாந்தம் கற்பழிப்பு, கொலை முதலான குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்கின்றன என்ற மிகையான ஒரு கருத்தை ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிக்கின்றார்.
நாட்டில் யுத்த நிலைமை இல்லாத நிலையில் ஊடகங்கள் தமது கவனத்தை குற்றங்கள் மீது செலுத்துகின்றன. முன்பு யுத்தத்தின் மீது ஊடகங்கள் தமது முழுக் கவனத்தையும் செலுத்தி வந்தன. இன்று யுத்தம் முடிந்த நலையில் அந்த வெற்றிடத்தை குற்றச் செயல்கள் பற்றிய செய்திகளால் நிரப்பி வருகின்றன என தெரிவிக்கின்றார்.
பொலிஸ் அறிக்கையின்படி எந்த நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கவில்லை என மேலும் அவர் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment