பிரதமர் அலுவலகத்திற்குள் வாளுடன் நுழைந்த நபர் சுட்டுக்கொலை
மலேஷியாவில் பிரதமர் அலுவலகத் திற்குள் வாளுடன் நுழைந்த மர்ம நப்ர் ஒருவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், அவருடன் வந்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என தொரிவிக்கப்படுகின்றது.
தலைநகர் கோலாலம்பூரில் நேற்று மாலை புட்ராஜெயா நகரில் உள்ள மலேஷியா பிரதமரின் தலைமை அலுவலகத்திற்குள், கூர்மையான வாளுடன் அத்துமீறி உள்ளே நுழைய முயன்ற நபரை அங்கு நின்றிருந் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்துள்ளனர்.
அப்போது அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் பொருட்களை அடித்து சேதப்படுத்தினார். ஒரு கட்டத்தில் நிலைமை அளவுக்குமீறி போகவே, பொலீசார் அவனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
பின்னர் காயமடைந்த குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர் எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி மணைமடைந்துள்ளார். விசாரணையில் அவன் வாள் தயாரிக்கும் தொழிலாளி என தெரிவந்ததுள்ளது. இந்த சம்பவத்தின் போது உடன் வந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் . அவரிடம் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment