இலங்கைக்கு பயிற்சி வழங்வேண்டாமென தமிழக த்தில் ஆர்பாட்டம் நடத்திய முக்கியஸ்தர்கள் கைது
இலங்கையின் கடற்படை அதிகாரி களுக்கு தமிழகத்தில் பயிற்சி வழங்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழககத்தின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக நீலகிரி மாவட்டத்தில் இடம்பெற்ற பயிற்சி நிலையத்திற்கு இலங்கை கடற்படையை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் பயிற்சிக்காக சென்ற போது, அங்கு கூடிய மறுமலர்ச்சி முன்னேற்றக் கழக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழககத்தின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பயிற்சி முகாபில் பங்களாதேஷ் லாஓஸ், வியட்நாம், மற்றும் நைஜீரியா, ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் பங்குபற்றியுள்ளதாக இந்திய பாதுகாப்பு தரப்பினரை மேற்கோள்காட்டி த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment