Sunday, July 29, 2012

லண்டன் புலிகளின் கஞ்சியில் மண்ணைத்தூவிய மஹிந்தர்.

பிரித்தானியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வுகளில் பங்கு கொள்ள வருகின்றாராம் என பரவவிடப்பட்ட கட்டுக்கதையைகேட்டு புலிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஜனாதிபதியின் வருகை ஒரு சில ஆயிரம் பௌண்டுகளுக்கு ஒருவழி வகுத்திருக்கின்றது என்று காவடியைத்தூக்கிக்கொண்டு வீதிக்கு இறங்கி தற்போது கடுப்பாகி உள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

ஜனாதிபதி லண்டனுக்கு வந்தால் மஹிந்தவை வெளியேற்று என ஆர்ப்பாட்டம் ஒன்றை நாடாத்தி அங்கு மக்களை அழைத்து உண்டியலைக் குலுக்கி பொக்கட்டை நிறைத்துக்கொள்ளலாம் என புலிகளால் போடப்பட்ட கணக்கு தப்புக்கணக்காகி உள்ளதால் உள்வீட்டில் பல சிக்கல்கள் தோன்றியுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.

கடந்தவருடம் ஜனாதிபதி எங்கு வந்து இறங்குகின்றார் என்று தெரியாமல் அல்லது தவறாக வேண்டுமென்றே வழங்கப்பட்ட தகவலால் உள்வீட்டினுள் மூண்ட நெருப்பு அணைவதற்குள் மீண்டுமொருமுறை மஹிந்தர் நெருப்பை மூட்டியுள்ளார். இவ்விடயத்தில் புலிவால் ஊடகம் ஒன்றின் நாடாத்துனர் ஒருவர் மீது புலிவால்கள் கடும் சினம்கொண்டு அவர்மீது பழிசுமத்தியிப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.

மேற்படி ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றுவதற்கு இலங்கையின் பிரதமர் அவரது மனைவி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவரது மனைவி , ஒலிம்பிக்குழுவின் இலங்கைக்காக பிரதம அதிகாரி அவரது மனைவி என அறுவருக்கு கடந்த பல மாதங்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர் சுகவீனமுற்றிருப்பதால் அவரால் நிகழ்வில் பங்குபற்ற முடியாமல் போயுள்ளது. ஆனால் ஒலிம்பிக் நிர்வாக ஒழுங்குகளின் பிரகாரம் ஆசனம் ஒதுக்கப்பட்டவர் கலந்து கொள்ள முடியாமல் போகுமிடத்து அவ்விடத்திற்கு எவரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அறிந்திராத புலிகள் மஹிந்தர் சிலவேளை வரலாம் என்ற கதையை நம்பி ஏமாந்துள்ளனர்.

புலம்பெயர் தேசத்தில் மஹிந்தருக்கு எதிராக மேற்கொள்கின்ற ஒவ்வொரு நடவடிக்கையும் சிங்கள மக்கள் மத்தியில் அவரது ஆதரவை அதிகரிக்கச் செய்யும் என்பதை அறிந்து கொண்டும் புலிகள் ஒப்பந்த அடிப்படையிலேயே இந்நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்களா என்ற கேள்வியும் எழுகின்றது.

No comments:

Post a Comment