Wednesday, July 25, 2012

கற்பழிக்கப் படும் கஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் !!!!

கஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம், மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம் தேவையான போது கொன்று புதைக்கலாம்

பெண்களைப் கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம், புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம். இன்னும், இன்னும்.எது வேண்டுமானாலும் செய்யலாம் யாரும் கேட்க மாட்டார்கள் இந்தியாவை எந்த மேற்குலக அரசும் அது பற்றி கேட்காது எவர் தமக்காக பேசாவிட்டாலும் வீரச் செருக்குடன் வீதியில் இரங்கி போராடும் மக்கள் மனம் உடைந்து விடவில்லை, ஐக்கிய நாடுகள் சபையின் சர்ச்சைக்குரிய பகுதி என்ற பட்டியலில் இருந்து கஷ்மீரை நீக்கினாலும் கஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்ட உணர்வை எதுவும் செய்து விடாது

ஆசியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது. ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு, காணும் இடமெல்லாம் மரண ஓலங்கள் காணும் இடமெல்லாம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் படுகொலைகள்

உலகின் மிகக் கொடூரமான இராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் பாரிய இனப்படுகொலையை இந்திய இராணுவம் சத்தமின்றி நிகழ்த்தி வருகிறது.

“தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த இராணுவம் சிப்பாயின் ஆசை. ‘வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்’ என அந்தத் தாய் இராணுவ சிப்பாயின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். ‘என்னால் இதை நிச்சயம் காண இயலாது; என்னை கொன்று விடுங்கள்’ என்கிறார் அவர். அந்த இராணுவ சிப்பாயின் வன்புணர்வுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் தன் உடைகளைக் களைந்து கொண்டே, ‘உன் ஆசைப்படியே நடக்கட்டும்’ என அவருடைய நெற்றியில் தானியங்கித் துப்பாக்கியை வைத்துச் சில சுற்றுகள் தோட்டாக்களை செலுத்துகிறான். தன் காரியத்தைத் தொடர்கிறான்”.

இதுபோன்ற ஓராயிரம் கதைகளை, காஷ்மீர் சென்று வந்துள்ள மனித உரிமைக் குழுக்கள் பதிவு செய்துள்ளன. இந்தச் சம்பவம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவமும் அதன் துணைப் படைகளும் நாள்தோறும் காஷ்மீரில் வாடிக்கையாக நடத்தும் அட்டூழியங்களில் ஒன்றுதான் மேலே பதிவுசெய்யப்பட்ட சம்பவம்.

1989-2009 வரையிலான காலப்பகுதியில் மட்டும் காஷ்மீரில் 8,000 பேரை காணவில்லை. 70,000 பேர் போலி மோதல் சாவுகளிலும் அரசின் பாதுகாவலிலும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய 1990 முதல் மட்டும் 15,000 மனுக்களை வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த மரண எண்ணிக்கைகூட, மிகக் குறைந்த அளவில்தான் கணக்கிடப்பட்டுள்ளது என்று தகவகல்கள் தெரிவிக்கின்றது..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com