பொலிஸாரும் இராணுவத்தினரும் மேற்கொண்ட கூட்டு முயற்சியினால் மாணவர்கள் மீட்பு
கண்டி- ஹந்தான காட்டில் நிர்கதியான மொரட்டுவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள், பொலிஸாரும் இராணுவத்தினரும் மேற்கொண்ட கூட்டு முயற்சியினால் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஹந்தான மலைக்கு ஏறிய இவர்கள், அங்கு பெய்த பலத்த மழையுடன் ஏற்பட்ட பனி காரணமாக நிர்க்கதியானார்கள். காட்டில் நிர்க்கதியான இவர்கள் செல்லிட தொலைபேசி மூலம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கண்டி தலைமையக பொலிஸ் நிலைய அவசர அழைப்பு பிர்வு அதிகாரிகள், கண்டி இராணுவ முகாம் அதிகாரிகளின் உதவியுடன் மாணவர்களை தேடிச் சென்றனர். இதன் பயனாக இவர்கள் மீட்டெடுக்கப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment