பாரளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கத்தை விமர்சிக்கின்றார் ரணில்
பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஒழுக்கம் இன்று மிகவும் கீழ் நிலையை அடைந்துள்ளது எனவும், பாராளு மன்றத்தின் கௌரவத்தை மீண்டும் நிலை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து, பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.
அத்துடன், ஒவ்வொரு பாராளமன்ற உறுப்பினரும் குறிப்பிட்ட நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும், கடமைக்கு வருகை தரும் நேரம், கடமை முடிந்து செல்லும் நேரம் குறிப்பிட வேண்டுமெனவும், அவ்வாறே பாராளமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நேரத்தையும் தீர்மானிக்க வேண்டும் எனவும், இவ்வாறு பேணப்படாததால் பாராளமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஒழுங்காகப் பங்குபற்றுவதில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் பாராளுமன்றத்தில் அவர்களின் செயற்பாடுகள் பற்றி பதிவேடுகள் பேணப்பட வேண்டும், அத்துடன் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர்களின் பங்குபற்றுதல் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, ஒழுங்காக வந்தோர் வராதோரின் பெயர்களை வெளிப்படுத்த வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க யோசனை தெரித்துள்ளார்.
0 comments :
Post a Comment