பிள்ளையானிடமுள்ள ஆயுதங்கள் பறிக்கப்படும். தேர்தல் ஆணையாளர் உறுதி.
கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படுகின்ற சிவனேசதுரை சந்திகாந்தனிடமுள்ள சுடுகலன்கள் மற்றும் ஆபத்தான ஆயுதங்களை ஆகஸ்டு 01 ம் திகதிக்கு முன்னர் பொலிஸ் பொறுப்பேற்கும் என்று 20 ம் திகதி தேர்தல் ஆணையாளரும் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்னவும் கூறியுள்ளார்கள்.
இம்முறை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளோடு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, கட்சிப் பிரதிநிதிகளால் மட்டக்களப்பில் அரசியல் நிலைமை தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்குப் பதிலளிக்கும் போதே மேற்படி வாக்குறுதி அளிக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சரின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு வேறாக பிரபுக்களுக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதால் சட்டமுரணான முறையில் சுடுகலன்கள் சகிதம் தனிநபர்களை தனக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டிருக்கின்றார் என்று கட்சிப் பிரதிநிதிகள் முறையிட்டனர். அவ்வாறே மட்டக்களப்பு முழுதும் அவர்களின் கட்சி உறுப்பினர்கள் சுடுகலன்களுடன் திரிகின்றார்கள் என்றும் முழு மட்டக்களப்பு மாவட்டமும் அச்சத்திலும் ஆயுதத்திலும் மூழ்கியுள்ளது என்றும் அவர்கள் மேலும் குறைபட்டார்கள்.
இது சம்பந்தமான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இன்னும் 10 நாட்களுக்குள் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் போது முன்னேற்ற அறிக்கையை வழங்குவதாகவும் தேர்தல் ஆணையாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபரும் கூறினார்கள்.
0 comments :
Post a Comment