எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் சிரேஷ்ட படைத் தலைவரை முன்னிறுத்தவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான இறுதித் தீர்மானம் வரும் 5 ம் திகதி இடம் பெறும் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும், தனித்தா அல்லது கூட்டணி அமைத்தா போட்டியிடுவது என இதன் போது முடிவு செய்யப்படும் என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள் ஐ.தே.க சார்பில் போட்டியிட முன் வந்திருப்பதாகவும், திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment