தேர்தல் சட்டங்களையோ தேர்தல் ஆணையாளரின் கட்டளைகளையோ மதிக்காத ஐ.ம.சு.கூ வேட்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு, மகாவலி மையத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேர்தல் ஆணையாளருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வண்ணம் எல்லா அரச சொத்துக்களையும் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று தமது வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக குறிப்பிட்ட அவர், எல்லா மூன்று மாகாணங்களிலும் தமக்கு வெற்றி நிச்சயம் எனவும், அது சுதந்திரமானதாகவும், நேர்மையாகவும் இடம் பெற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் நெருங்கிய உறவினர்களுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படாது என்ற தனது கூற்று இன்றும் வலுவில் இருப்பதாகவும், ஆனால் விதிவிலக்குகளாக சில நியமனங்கள் வழங்க நேர்ந்தது என்றும். அக்கட்சியின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment