அவுஸ்திரேலிய தூதரக உத்தியோகத்தர்களின் பொருட்களை திருடிய இருவர் கைது
வெளிநாட்டு பிரஜைகளின் பொருட்களை திருடிய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், அவுஸ்திரேலிய தூதரக அலுவலகத்தின் உத்தியோகத்தர்களுக்குரிய பல பொருட்களை திருடியுள்ளதாகவும், இவற்றின் பெறுமதி 35 லட்சம் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள், பூஸ்ஸ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment