கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது கணவனை, கள்ளக்காதனுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்த மனைவியையும், கள்ளக்காதலனையும், அவரது 2 நண்பர்களையும் கைது செய்துள்ளதாக கடலூர் மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியகோட்டிமூளை கிராமத்தை சேர்ந்த ஜய்யப்பனுக்கும் (37). சங்கீதா என்பவருக்கு கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு சங்கீதாவின் வீட்டில் குடியேறிய ஜய்யப்பன், அங்கு விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தனது கணவன் ஜய்யப்பனை கடந்த 20ம் திகதி முதல் திடீரென காணவில்லை என சங்கீதா, காட்டுமன்னார்கோவில் பொலிஸ் நிலையத்தில் துறைப்பாடு செய்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரித்து வந்தனர். தனது கணவர் காணாமல் போன நிலையிலும், சங்கீதாவிற்கு எந்த கலக்கமும் இல்லாமல் வழக்கம் போல ஜாலியாக சுற்றி திரிந்தார். இதையடுத்து சங்கீதாவின் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சங்கீதாவின் நடவடிக்கைகளை கவனித்தனர். இதையடுத்து சங்கீதாவிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அப்போது தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் ஜய்யப்பனை, கள்ளக்காதலன் வரதராஜன் உடன் சேர்ந்து கொலை செய்ததாக சங்கீதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சங்கீதா மற்றும் வரதராஜன் விசாரணையில் கூறியதாவது,
காட்டுமன்னார்கோவிலை வடபாக்கத்தை சேர்ந்தவர் வரதராஜன். சங்கீதாவின் சகோதரரின் மைத்துனரான அவர், சங்கீதாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது சங்கீதாவிற்கும், வரதராஜனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
ஜய்யப்பன் வெளியூர்களுக்கு செல்லும் போது, வரதராஜனை வீட்டிற்கு அழைத்த சங்கீதா அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதேபோல ஒருமுறை உல்லாசமாக இருந்த போது, ஜய்யப்பன் பார்த்து கண்டித்துள்ளார். மேலும் வரதராஜனை வீட்டிற்கு வரக் கூடாது என்று கூறிவிட்டார். சங்கீதாவின் கள்ளக்காதல் சம்பவத்தை நினைத்து தினமும் வரதராஜன் மது குடித்து வந்து அவரை கொடுமைப்படுத்தி உள்ளார்.
இந்த நிலையிலும் கள்ளக்காதலை தொடரும் வகையில் வரதராஜன், சங்கீதாவிற்கு செல்போனை வாங்கி கொடுத்துள்ளார். இதன்மூலம் இருவரும் பேசி கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். அப்போது தினமும் தன்னை சித்ரவதை செய்யும் ஜய்யப்பனை கொலை செய்துவிடலாம் என்று வரதராஜனுக்கு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார் சங்கீதா.
திட்டத்திற்கு ஒப்புக் கொண்ட வரதராஜன் சம்பவத்தன்று ரூ.50 ஆயிரம் தருவதாக கூறி ஜய்யப்பனை அழைத்துள்ளார். இதை நம்பிய ஜய்யப்பன் வடபாக்கத்திற்கு வந்துள்ளார். அப்போது ஜய்யப்பனை தனது நிலத்திற்கு அழைத்து சென்ற வரதராஜன், நண்பர்களுடன் சேர்ந்து அவரை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி உள்ளார்.
இதில் படுகாயமடைந்த ஜய்யப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து நிலத்திற்கு அருகில் இருந்த கிணற்றில் அய்யப்பனை புதைத்துவிட்டனர். வெளியே சந்தேகம் வராமல் இருக்க, சங்கீதா தனது கணவனை காணவில்லை என்று புகார் அளித்துவிட்டு நாடகமாடி உள்ளார்.
இதையடுத்து சங்கீதா, அவரது கள்ளக்காதலன் வரதராஜன், அவரது 2 நண்பர்கள் ஆகியோரை பொலியார் கைது செய்தனர். மேலும் வரதராஜனுக்கு சொந்தமான கிணற்றில் புதைக்கப்பட்டிருந்த ஜய்யப்பனின் உடலை நேற்று பொலிஸார் தோண்டி எடுத்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை பொலிஸர் தேடி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment