Monday, July 23, 2012

ஹக்கீம் தோற்பது உறுதி – அப்துல் காதர் எம்.பி.

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை விட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு பெரிய வாக்கு வங்கி இருப்பதால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத் தேர்தலில் தோற்பது உறுதி என்று பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட அவர் தமது கட்சிக்கு மிக அதிகமான இடம் கேட்டு, அது கிடைக்காததால் தமது மரச்சின்னத்தில் இறங்கியுள்ளார் எனவும், ஒரு அரசியல் கட்சியில் இருந்து இன்னொரு அரசியல் கட்சியைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கும் ஹக்கீமின் செயற்பாடுகள் கேள்விக்குரியவை எனவும், அரசாங்க அமைச்சராக இருந்து கொண்டு, பொய்கூறி மக்களைத் தவறாக வழிநடத்துகின்றார் என்றும் ஹக்கீமை குற்றம்சாட்டியுள்ளார் காதர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com