நீதிமன்ற கட்டளை வரும்வரை நிமலரூபனின் உடலை அடக்கம் செய்ய முடியாது.
வவுனியா சிறைச்சாலையில் இடம் பெற்ற சம்பவத்தில் காயமுற்று மகர சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்த, வவுனியா பகுதியைச் சேர்ந்த புலிச் சந்தேக நபரான நிமலரூபனின் உடலை மேல் நீதிமன்ற கட்டளை வரும் வரை இந்த மாதம் 23 ம் திகதி வரைக்கும் அடக்கம் செய்யக் கூடாது என்று மகர நீதவான் நீமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
மரணமடைந்த சந்தேக நபரின் பெற்றோரால் பூதவுடலை வவுனியாவுக்கு கொண்டு வருவதற்கு அனுமதி கேட்டு மகர நீதவான் நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட வேண்டுதலை பரிசீலித்த நீதவான் மேற்படி கட்டளையை வழங்கியுள்ளார்.
மரணமடைந்தவரின் பெற்றோர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, யுத்தம் முடிந்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். எனவே பூதவுடலை வவுனியாவுக்கு கொண்டு சென்றால் எந்தவித பிரச்சினையும் உருவாகாது என்று வாதிட்டிருந்தார்.
0 comments :
Post a Comment