வருகின்றது புதிய சட்டம்! வைக்கப்படுகின்றது பொறி சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்கு
சிறைச்சாலை அத்தியட்சகர் பொறுப்பு கூறும் வகையில் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானித் துள்ளதாகவும், சிறைச்சாலைகளில் இடம்பெறும் சட்ட விரோதமான செயல்களை கட்டுபடுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, புனர்வாழவு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
இப்புதிய திட்டத்திற்கிணங்க சிறைச்சாலைக்குள் கைதிகளின் பாவனைக்கு தடைவிதிக் கப்பட்டுள்ள கையடக்க தொலைபேசி, போதை பொருள், மற்றும் பண சேமிப்பு நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டால் இதுவரை காலமும் கைதிகளுக்கே தண்டனை வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் புதிய சட்ட திருத்தத்திற்கு அமைய சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சிறைச்சாலை அத்தியட்சகர்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்தல் மற்றும் தண்டப்பணம் அறவிடல் ஆகியவற்றை ஏற்படுத்த சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வுள்ளதாகவும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment