தற்கொலை குண்டு தாக்குதலில் சிரிய பாதுகாப்பு அமைச்சர் பலி. பல முக்கியஸ்தர்கள் காயம்
இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் சிரிய பாதுகாப்பு அமைச்சர் ரஜிஹா பலியாகியுள்ளார் என தொவிக்கப்படுகின்றது. சிரிய பாதுகாப்பு அமைச்சர், இராணுவ தலைமை யகத்தில் இடம்பெற்ற இராணுவ உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட போதே இந்த தற்கொலை தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிரியாவின் புலனாய்வுத் துறைத் தலைவர் ஹிஷாம் இக்திகர், உள் துறை அமைச்சர் மொஹமட் இப்ராஹீம் அல்-ஷார் ஆகியோரும் படுகாயமடைந்துள்ளனர் எனஅரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் சிரிய போராளி துருப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment