ஈயத்துண்டுகளுக்கு தங்க முலாம் பூசி விற்பனை செய்த மூவர் கைது
கண்டி பிரதேசத்தில் சில வர்த்கர்கள் ஈயத்துண்டுகளுக்கு தங்க முலாம் பூசி விற்பனை செய்து வருவது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ள தாகவும், இவ்வாறு போலி தங்க வர்த்தகத்தில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 கிலோ ஈயம், மற்றும் தங்க நிற வர்ணபூச்சுக்கள் கைப்பற்றப்பட்டதாகவும், குறித்த சந்தேக நபர்களின் வீடுகளை சோதனையிட்ட போது பணம், மற்றும் கையடக்க தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகவும், குறித்த சந்தேக நபர்கள் இதற்கு முன்னரும் மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டமை விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment