கலைஞர்களுக்கு வட்டியில்லாக் கடன்! விண்ணப் பங்களை ஊடகத்துறை அமைச்சில் பெறலாம்!
சிரேஷ்ட கலைஞர்களுக்கு மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான வட்டியில்லா கடன் வழங்கும் செயற்திட்டம் துரிதப்படுத்தப் பட்டுள்ளதாகவும், 2012 ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த ஆலோசனையை அமுல்ப்படுத்தும் முகமாக, கலைஞர்களுக்கு குறித்த வட்டியில்லா கடன் திட்டத்தில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விண்ணப்பங்களையும், அது தொடர்பான விபரங்களையும், தகவல் ஊடகத்துறை அமைச்சில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் இணையதளங்களுடாகவும், இது தொடர்பான விடயங்களை பெற்றுக்கொள்ள முடிவதுடன் அண்மையில், சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் இது தொடர்பான அறிவித்தல்கள் வெளியிடப்பட்டதாக, தகவல் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment