சுவிற்சர்லாந்து வங்கிகளில் பணவைப்பு செய்தவர்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
சுவிற்சர்லாந்து வங்கிகளில் இரகசி யமான முறையில் இலங்கையின் முதலீட்டாளர்கள், மற்றும் தனிநபர்கள் பலர் பணவைப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, பண வைப்பு செய்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாடுகளிலுள்ள வங்கிகளில் இலங்கையர்கள் பண வைப்புக்களை செய்ய முடியாது எனவும், இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் உறவினர்களின் உதவியுடன் இரகசியமான முறையில் இலங்கையர்கள் பலர் சுவிற்சர்லாந்து வங்கிகளில் பெருந்தொகையான பணத்தினை வைப்புச் செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்கள் கடத்தப்படுவதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment