Wednesday, July 11, 2012

காலாவதியான முக்காடு – லம்யா கடோர், இஸ்லாமிய அறிஞர்.

முக்காடிடுவது காலாவதியான வழக்கமாகும். ஜெர்மனியில் வாழும் ஒரு முஸ்லிம் பெண் என்ற வகையில் நான் என்னையே கேட்டுக் கொள்வது என்ன வென்றால், குரானில் (33.59) சொல்லப்பட்டிருப்பது போன்று நான் மேலதிக துண்டொன்றால் முக்காடிட்டு தலைமை மூடிக்கொள்ள வேண்டுமா, முக்காடிடுவது ஆண்களின் இச்சைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு என்ற அதன் மூல நோக்கம் இன்றும் நிறைவேற்றப்படுகின்றதா என்பதே. அதற்கு எனது பதில் இல்லை என்பதாகும். இன்றைய ஜெர்மனியில் அத்தகைய தலையை மறைத்தல், அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்பதே என்று கூறுகிறார் ஜெர்மனில் குடியேறியுள்ள சிரியன் வம்சாவளி இஸ்லாமிய பெண் அறிஞரான லம்யா கடோர். அது கடவுள் எதிர்பார்த்தற்கு மாறாக பெண்களுக்கு எதிரான பாகுபாட்டையே கொண்டு வந்துள்ளது.

இன்று கடந்தகால சமூக விதிகளைப் பின்பற்றாமல், பெண்களுக்கெதிரான தொந்தரவுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நன்கு செயல்படும் சட்ட முறைமை இருக்கின்றது. சட்டவாட்சியை அடிப்படையாகக் கொண்ட சுதந்திர நாடு, பெண்களுக்கு எதிரான தாக்குதல்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கின்றது என்று கூறும் கடோர், ஒரு சிறிய துண்டுத் துணியின் பின்னால் என்னை நான் மறைத்துக் கொள்ள முடியாது.ஒரு சுதந்திரமான ஜனநாயக நாடு உரிமைகளை வழங்கி கடமைகளையும் சுமத்துகின்றது. அத்தகைய சூழ்நிலைய்ப முக்காடுடனோ முக்காடின்றியோ நான் நேர்மையாக நடந்து கொள்ள முடியும் என்கின்றார்.

4 comments :

N. Abdul Hadi Baquavi July 12, 2012 at 8:06 AM  

ஆண்களின் தவறான பார்வையிலிருந்து தங்களையும் தங்கள் கற்பையும் காத்துக்கொள்வது பெண்களின் கடமை. அவர்களைத் தண்டிக்கச் சட்டம் இருக்கிறதுதான். ஆனால் எல்லா இடத்திலும் சட்டம் வந்து முன்னிற்காது. நாம்தாம் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்.

நூ. அப்துல் ஹாதி பாகவி.
சென்னை

அபூ ஸாலிஹா July 12, 2012 at 10:47 AM  

ஹிஜாப் என்பதன் பொருளை நுனிப்புல் அளவிற்குக் கூட அறிந்திராதவர் அம்மணி என்பதை அவரின் துண்டுத் துணி ஸ்டேட்மெண்ட் பறைசாற்றுகிறது.

தலையை மட்டும் துண்டுத் துணியால் "பேருக்கு" மறைத்து உடலின் பிற பாகங்கள் ஆண்களை சுண்டி இழுக்க வைக்கும் நவீன(!) உடை பற்றி இவர் குறிப்பிடுகிறார் என்றால், அதனால் யாருக்கும் எவ்விதப் பயனும் இல்லை.

தலையை மட்டும் மறைத்துக் கொள்வது ஹிஜாப் அல்ல. அணியும் ஆடைக்கு வேறு சில இலக்கணங்களும் இருந்தால் தான் அது ஹிஜாப் என்பதை அம்மணி உணரவேண்டும்.

திறமையினால் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இது போன்ற பல ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் (http://www.satyamargam.com/a-priceless-quote-from-a-confident-muslim-woman) சொல்வதையும் கூடவே இவர் வாசித்து தமது இஸ்லாமிய அறிவை விரிவாக்கிக் கொள்ள வேண்டும்.

அபூ ஸாலிஹா
(IslamicDress.blogspot.com)

Unknown July 12, 2012 at 3:51 PM  

மீண்டுமோர் தஸ்லிமா நஸ்ரினா?
இவர்களெல்லாம் அப்பப்ப வருவார்கள்
வோர்கள் இவர்களால் இஸ்லாத்திற்கு
எந்தப்பாதிப்பும் ஏற்படப்போவதில்லை
இவர் தன்னை பிரபல்யமாக்குவதற்கான
முயற்ச்சியே இது இறைவன் நெர்வழி
காட்டுவானாக

கெக்கிராவ தவ்ஹீத் ஜமாஅத்
இலங்கை

Anonymous ,  July 12, 2012 at 9:38 PM  

இப்படியான அம்மணிகள் உளரும் வார்த்தைகளை ஜெர்மன் முஸ்லிம்கள் கணக்கில் எடுப்பதில்லை.

கொஞ்சம் நாள்களாக இவர், ஜெர்மன் டிவி சேனல்களில் வலம் வருவார்.

சிறிது நாளைக்குப்பின், அவர்களும் கைகழுவி விடுவார்கள்.

யூசுப் - ஜெர்மன்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com