Sunday, July 22, 2012

எல்ரிரிஈ இப்போதும் ஆட்கடத்தல் செய்கின்றது – ரொகான் குணரட்ன.

எல்ரிரியின் ஒரு சாரார் மனித உரிமைச் செயற்பாட்டாளராக தம்மைக் காட்டிக்கொண்டிருக்க பயங்கரவாத-குற்றவாளிகளான அவர்களின் இன்னொரு சாரார் கப்பம் பெறல், ஆயுத் கொள்வனவு, சட்ட விரோத கடற் பயணம், பயங்கரவாத நடவடிக்கைகள், காணி, களியாட்டம் மற்றும் ஆட்கடத்தல் என்பவற்றில் ஈடுபடுகிறார்கள் என்று சிங்கப்பூரில் இருக்கும் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத ஆய்வுக்கான பன்னாட்டு மையத்தின் தலைவர் ரொகான் குணசேகர கூறுகின்றார்.

இலங்கையில் ஆட்கடத்தில் விடயத்தில் அவர்கள் தங்களைப் பலப்படுத்தியுள்ளதாகவும் இம்மாதத்தில் மாத்திரம் அவ்வாறு கடத்தப்பட்ட படகுகளில் இருந்து 400பேரை கடற்படை மீட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

2009 க்குப் பிறகு எல்ரிரிஈயின் ஆட்கடத்தல் வியூகம் மாற்றப்பட்டிருப்பதாகவும் தற்போது அவர்கள் தமது உறுப்பினர்களையும் அவர்களது குடும்பங்களையும் ஆசியா மற்றும் மேற்கு நாடுளில் கொண்டு சென்று குடியேற்றுவதில் முனைப்புக் காட்டுகின்றனர் என்று மேலும் கூறும் குணரட்ன சன்சீ மற்றும் அலிஸியா கப்பல்கள் ஆயுதக் கடத்தலுக்கல்ல ஆட்களைக் கடத்தவே பயன்பட்டன என்றும், அவர்கள் கிறடிட் கார்ட், வங்கி மற்றும் காசோலை மோசடிகள், போலிப் புகலிடம்போன்ற சட்ட முரணான செயற்பாடுகள் ஊடாக நிதி பெறுகின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com