தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் போடடியிடப்போகிறார்களாம்
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்ததையடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட முஸ்லிம் வேட்பாளர்கள் தீர்மானித்துள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் 2008 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. ஈழவேந்தன் விடுமுறை பெறாமல் 3 மாதங்களுக்கு மேல் பாராளுமன்றத்திற்கு சமுகமளிக்காததால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இதையடுத்து, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஆர்.எம்.இமாமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நியமித்தமை குறிப்பிடத்தக்கது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment