Thursday, July 5, 2012

மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்று ஜெனீவா ஆற்றில் வீசியதாக சுவிஸில் தமிழன் கைது.

சுவிற்சர்லாந்தில் ஜெனிவா நகரில் வசித்துவந்த பெண் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட பின்னர் அங்கு ஓடுகின்ற நதி ஒன்றில் வீசப்பட்டுள்ளார். குறித்த கொலை தொடர்பில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றது.

கைது செய்யப்பட்டவர் சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகி சில மணித்தியாலயங்களிலேயே அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுவிற்சர்லாந்தில் மனைவியர் மற்றும் குழந்தைகளை சித்திரவதை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் அந்நாட்டில் பல தமிழர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் கடந்தவாரம் குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த சுவிற்சர்லாந்து தமிழர் ஒருவர் யாழ்பாணத்தில் தனது வீட்டுக்கு பக்கத்து வீட்டு பெண்ணொருரை கூட்டிக்கொண்டு ஓடிய சம்பவம் யாழ்பாணத்தில் பெரும் புரளியைக் கிளப்பியுள்ளது.

ஓடிய இருவரும் திருமணமாகி குழந்தைகள் உள்ளவர்கள். யாழ்பாணத்தில் தனது கணவனைப் பறிகொடுத்த சுவிற்சர்லாந்து தமிழிச்சி தனது கணவனுடன் ஓடிச்சென்ற தாயின் தலையை அடித்து உடைத்துள்ளார்.

ஓடிச்சென்ற பெண்ணுக்கு 3 பிள்ளைகள் உள்ள நிலையில் அவர் தனது பிள்ளைகளை தாயார் பார்பார் என்ற எதிர்பார்பில் சென்றிருக்ககூடும், ஆனால் தற்போது தாயார் மண்டை உடைந்து வைத்தியசாலையில் உள்ள நிலையில் 3 பிள்ளைகளும் அநாதைகளாக நிற்பதாக அறியமுடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com